உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பைக் மோதி கூலித்தொழிலாளி பலி

பைக் மோதி கூலித்தொழிலாளி பலி

புதுச்சேரி: பைக் மோதி கூலித்தொழிலாளி பரிதபமாக இறந்தார்.விழுப்புரம் மாவட்டம் கிளியனுார் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் ரத்தினவேல் 54, இவர் மூலகுளம் தனியார் புளூ மெட்டல் கடையில் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 7 ம் தேதி வீட்டில் இருந்து புதுச்சேரிக்கு வந்தார். இந்திரா சிலை அருகில் வடக்கில் இருந்து தெற்கு நோக்கி நடந்து சென்றார். அப்போது கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி வந்த பைக் ரத்தினவேல் மீது மோதியது. இதில் துாக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த அவர் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று மாலை ரத்தினவேல் சிகிச்சை பலனின்றி இறந்தார். புகாரின் பேரில் போக்குவரத்து வடக்கு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை