உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பார்சல் கார்கோ எக்ஸ்பிரஸ் ரயில் சேவை துவக்கம்

பார்சல் கார்கோ எக்ஸ்பிரஸ் ரயில் சேவை துவக்கம்

புதுச்சேரி: புதுச்சேரி சின்னபாபு சமுத்திரத்தில் இருந்து பார்சல் கார்கோ எக்ஸ்பிரஸ் ரயிலில் 160 டன் மதிப்புள்ள 5,346 பாக்ஸ் வாஷிங்மெஷின்கள் ஹரியானா மாநிலம் அனுப்பி வைக்கப்பட்டது.தென்னக ரயில்வே பயணிகள் சேவை மட்டுமின்றி சரக்கு ரயில் சேவையிலும் வர்த்தக ரீதியாக வருவாய் ஈட்டி வருகிறது. தற்போது ரயில்வேயில் வர்த்த மேம்பாட்டு பிரிவு ஒன்றும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இப்பிரிவு மூலம் 'பார்சல் கார்கோ எக்ஸ்பிரஸ் ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இந்த ரயில்சேவை வழியாக முக்கிய இடங்களுக்கு தொழில் நிறுவனங்கள் தங்களுடைய உற்பத்தி பொருட்களை கொண்டு செல்ல முடியும். இதற்காக தென்னக ரயில்வே மூலம் பல்வேறு இடங்களில் குடோன்கள், 'குட்ஸ்ெஷட்' என்ற பெயரில் ஏற்படுத்தி வருகிறது. புதுச்சேரி அடுத்த சின்னபாபு சமுத்திரத்தில் 'குட்ஸ்ெஷட்' ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.இங்கிருந்து தென்னக ரயில்வே சார்பில் முதல் முதலாக பார்சல் கார்கோ எக்ஸ்பிரஸ் ரயில் சேவை நேற்றுமுன்தினம் துவக்கப்பட்டது. இந்த சரக்கு ரயிலில் வேர்ல்புல் நிறுவனத்தின் வாஷிங் மெஷின்கள் ஹரியானா மாநிலம் பல்வால் என்ற இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. பார்சல் கார்கோ எக்ஸ்பிரஸ் ரயில் மொத்தம் 25 வேகன்களில் 160.8 டன் மதிப்புள்ள 5,346 பாக்ஸ் வாஷிங் மெஷின்களை, சுமந்து கொண்டு ஹரியானா மாநிலத்திற்கு புறப்பட்டு சென்றது. இதன் மூலம் துவக்க சேவையிலேயே 16.57 லட்சம் ரூபாய் தென்னக ரயில்வே வருவாய் ஈட்டியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை