உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரியில் விற்பனைக்கு குவிந்துள்ள லிச்சி பழம்

புதுச்சேரியில் விற்பனைக்கு குவிந்துள்ள லிச்சி பழம்

புதுச்சேரி : புதுச்சேரியில் விற்பனைக்கு வந்துள்ள லிச்சி பழத்தை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.லிச்சி பருவ கால பழம். லிச்சி பழகத்தில் புரதம், கொழுப்பு, நார்சத்து, கால்சியம், மாவுசத்து உள்ளிட்ட ஏராளமான சத்துக்கள் உள்ளன. லிச்சி பழத்தில் ஆண்டி ஆக்ஸிடன்ட்டு அதிக அளவில் இருப்பதால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை நோய் தாக்கத்தில் இருந்து பாதுாப்பு அளிக்க கூடியது. மருத்துவ குணம் கொண்ட லிச்சி பழம், கொல்கத்தாவில் இருந்து புதுச்சேரிக்கு வந்துள்ளது.நகரின் பிரதான சாலைகளில் தள்ளு வண்டிகளில் இந்த லிச்சி பழம் விற்பனைக்கு வைத்துள்ளனர். கிலோ 500 முதல் 600 ரூபாய் வரை விற்பனை செய்கின்றனர். பொதுமக்கள் ஆர்வமுடன் லிச்சி பழத்தை வாங்கி செல்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி