உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மண்ணாடிப்பட்டு கொம்யூன் கிராம சபை கூட்டம்

மண்ணாடிப்பட்டு கொம்யூன் கிராம சபை கூட்டம்

திருக்கனுார்: மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து சார்பில் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 18 கிராமங்களில் கிராம சபை கூட்டம் நேற்று நடந்தது.காட்டேரிக்குப்பம் அரசு பள்ளி வளாகத்தில் நடந்த கூட்டத்திற்கு ஆணையர் எழில்ராஜன் தலைமை தாங்கினார். இதில், பங்கேற்ற பொது மக்கள் கிராமத்தின் உட்புற சாலைகளை சீரமைக்க வேண்டும். மின்சாரம், குடிநீர் பற்றாக்குறை போக்க வேண்டும். தெருமின் விளக்குகள் அமைக்க வேண்டும் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.இதற்கு, ஆணையர் எழில்ராஜன் பொதுமக்கள் கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டு, அந்தந்த துறை மூலம் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.இதில், கொம்யூன் பஞ்சாயத்து உதவி பொறியாளர் மல்லிகா அர்ஜூனா, விவசாயத்துறை, மின்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட பல்வேறு துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.இதேபோல், கொம்யூன் பஞ்சாயத்திற்கு உட்பட்ட 18 கிராமங்களில் கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டு, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ