உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மாரியம்மன் கோவில் செடல் திருவிழா 

மாரியம்மன் கோவில் செடல் திருவிழா 

புதுச்சேரி: மங்கலம் முத்துமாரியம்மன் கோவில் செடல் திருவிழா நடந்தது.வில்லியனுார் அடுத்த மங்கலம் கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் செடல் உற்சவம் கடந்த 11ம் தேதி துவங்கியது. தினமும் காலை அம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்து வந்தது.நேற்று முன்தினம் காலை 10:00 மணிக்கு சாகை வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம், கும்பம் படையல் நடந்தது. மாலை 4:00 மணிக்கு செடல் உற்சவம் நடந்தது. ஏரளமான பக்தர்கள் அலகு குத்தி தேர், கார், டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களை இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று காலை 7:00 மணிக்கு அம்மனுக்கு மஞ்சள் நீர் உற்சவம் நடந்தது.ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை