உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / செவிலியர் கல்லுாரி மாணவி மாயம்

செவிலியர் கல்லுாரி மாணவி மாயம்

திருக்கனுார், : வாதானுாரில் வீட்டில் இருந்து வெளியே சென்ற மகளை காணவில்லை தாய் போலீசில் புகார் அளித்துள்ளார். திருக்கனுார் அடுத்த வாதானுார் அம்பேத்கர் வீதியைச் சேர்ந்தவர் சக்திவேல், கூலி தொழிலாளி. இவரது மகள் கிருத்திகா, 21; புதுச்சேரியில் உள்ள செவிலியர் கல்லுாரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் கடந்த 3ம் தேதி இரவு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிருத்திகா கிடைக்கவில்லை.இதுகுறித்து அவரது தாய் அன்புசெல்வி அளித்த புகாரின் பேரில் திருக்கனுார் சப் இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசார் வழக்கு பதிந்து, அவரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ