உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புரிந்துணர்வு ஒப்பந்தம்

புரிந்துணர்வு ஒப்பந்தம்

வில்லியனுார் : அரியூர் வெங்கடேஸ்வரா பிசியோதெரபி கல்லுாரி, மலேசியா எய்ம்ஸ்ட் பல்கலைக்கழக பிசியோதெரபியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது.அரியூர் வெங்கடெஸ்வரா மருத்துவ கல்வி குழுமத்தின் சேர்மன் ராமச்சந்திரன், நிர்வாக இயக்குனர் ராஜிவ்கிருஷ்ணா உத்தரவின்பேரில், கல்லுாரி தலைமை இயக்க அதிகாரி வித்யா முன்னிலையில் மலேசியா எய்ம்ஸ்ட் பல்கலைக்கழக துணை வேந்தர் கதிரேசன் சதாசிவம் மற்றும் வெங்கடேஸ்வரா பிசியோதெரபி கல்லுாரியின் முதல்வர் ஆனந்த்பாபு ஆகியோர் கல்வி மற்றும் ஆராய்ச்சியில் ஒத்துழைப்பை வளர்ப்பதற்கு இரு கல்வி நிறுவனங்களுக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.நிகழ்ச்சியில் பேராசிரியர் அலிட், பல்கலைக்கழக துணை சுகாதாரத் துறை துணை டீன் க் ஷத்ரஷல், பேராசிரியர் பால்ராஜ் மாணிக்கவேலு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ