உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / காலாப்பட்டு சிறையில் மொபைல் போன் பறிமுதல்

காலாப்பட்டு சிறையில் மொபைல் போன் பறிமுதல்

புதுச்சேரி : காலாப்பட்டு சிறையில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் இரண்டு மொபைல் போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.காலாப்பட்டு மத்திய சிறையில் 250க்கும் மேற்பட்ட தண்டனை கைதி மற்றும் விசாரணை கைதிகள் இருக்கின்றனர். இந்நிலையில், எஸ்.பி., பாஸ்கரன் தலைமையில், சிறை காவலர்கள் சிறையில் நேற்று திடீரென சோதனை செய்தனர். அப்போது சிறை வளாகத்தில் உள்ள தோட்டங்கள், கைதிகள் அடைக்கப்பட்டுள்ள அறைகளில் சோதனை நடத்தினர்.இதில் தோட்டத்தில் மறைத்து வைத்திருந்த ஒரு மொபைல் போனை போலீசார் கண்டுபிடித்தனர். அதே போல, கைதி அறையில் சோதனை செய்த போது, போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட பரமசிவம் என்பவரிடம் இருந்து ஒரு மொபைல் போனை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுபற்றி, சிறை காவலர்கள், காலாப்பட்டு போலீசில் புகார் செய்தனர். இதன் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ