உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நகராட்சி, கொம்யூன் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

நகராட்சி, கொம்யூன் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி : புதுச்சேரியில் சம்பளம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த ஆர்ப்பாட்டத்தில், நகராட்சி, கொம்யூன் ஊழியர்கள் பங்கேற்றனர்.புதுச்சேரி நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களின் கூட்டு பேராட்டக்குழுவினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதைத்தொடர்ந்து, 2ம் கட்டமாக நேற்று காலை சட்டசபை அருகில், மாதா கோவில் எதிரே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த போராட்டத்திற்கு வேளாங்கண்ணிதாசன் தலைமை தாங்கினார். கூட்டு போராட்டக்குழு நிர்வாகிகள் சகாயராஜ், ராஜா, பாலமுருகன், முருகவேல், ஆறுமுகம், சம்மேளன நிர்வாகிகள் பிரேமதாசன், ரவிச்சந்திரன், ராதாகிருஷ்ணன், கிறிஸ்டோபர், ஆனந்தகணபதி முன்னிலை வகித்தனர்.இதில், ஊழியர்களுக்கு சம்பளம், பென்ஷனை புதுச்சேரி அரசே நேரடியாக வழங்க உத்தரவிட வேண்டும். ஊழியர்களுக்கு, 7வது ஊதியக்குழு நிலுவைத்தொகை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை