உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / முருகன் கோவில் கும்பாபிேஷகம்

முருகன் கோவில் கும்பாபிேஷகம்

நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் அடுத்த ராம்பாக்கம் கிராமத்தில் உள்ள வெற்றிவேல் முருகன் வள்ளி தெய்வாணை கோவில் கும்பாபிேஷகம் விழா இன்று காலை 10:00 மணிக்கு நடக்கிறது.இதையொட்டி நேற்று காலை 8:30 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம், தனபூஜை, தீபாராதனை நடந்தது. மாலை 5:30 மணிக்கு வாஸ்துசாந்தி, பிரவேசபலி, யாகசாலை பிரவேசம், முதல்கால யாக பூஜை நடந்தது.இன்று காலை 7:00 மணிக்கு இரண்டாம் காலயா பூஜை, காலை 9:30 மணிக்கு பட்டு வஸ்தர ஹோமம், 9.45 மணிக்கு கடம் புறப்பாடு, 10:00 மணிக்கு விமான மகா கும்பாபிேஷகம், 10:15 மணிக்கு மூலவர் கும்பாபிேஷகம் நடக்கிறது. தொடர்ந்து மகா அபி ேஷகம் நடக்கிறது. இரவு சுவாமி வீதியுலா நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை