உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கடலில் கழிவுநீர் குழாய் ஆய்வு அறிக்கையை சமர்பிக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

கடலில் கழிவுநீர் குழாய் ஆய்வு அறிக்கையை சமர்பிக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

புதுச்சேரி : புதுச்சேரி சுற்றுச்சூழல் துறை, கடலில் கழிவுநீர் கலப்பது குறித்து நடத்திய ஆய்வறிக்கை விவரங்களை சமர்பிக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரி காலாப்பட்டு சொலாரா ஆக்டிவ் பார்மர் சயின்ஸ் என்ற தனியார் மருந்து தொழிற்சாலையின் கழிவு நீர் குழாய்கள், கடந்த, 2017ல் கடலில் துண்டித்து விடப்பட்டது. இந்த கழிவுநீர் குழாய்களில் மீனவர்களின் வலைகள் சிக்கி அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு, 5,க்கும் மேற்பட்ட மீனவர்களின் வலைகளில் பாதிப்பு ஏற்பட்டது.இது குறித்து மக்கள் நல சங்கம் சார்பில், அதன் தலைவர் குமார், தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார்.அதில், கடந்த பிப்., மாதம் தீர்ப்பாயம் நடத்திய விசாரணையில், கடந்த, மார்ச், 22.,ம் தேதிக்கு முன்பாக கடலில் உள்ள குழாய்களை ஆய்வு செய்து அறிக்கை தருமாறு புதுச்சேரி சுற்றுச்சூழல் துறைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. இதன் காரணமாக கடந்த, பிப்.,19ஆம் தேதி புதுச்சேரி சுற்றுச்சூழல் துறையானது மீன்வளத்துறை, வருவாய்த்துறை, கடலோர காவல்படை அதிகாரிகள் முன்னிலையில் படகுகள் மூலம் கடலுக்குள் சென்று ஆய்வு செய்தது.இந்த ஆய்வில் பெரிய காலாப்பட்டு மற்றும் கனகசெட்டிகுளம் இடையே 500 மீ., கடல் நடுவே, 6 மீ., ஆழத்தில் கம்பெனியின் கழிவு நீர் குழாய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த குழாயை வீடியோ மற்றும் புகைப்படம் மூலம் ஸ்கூபா டைவர்கள் படம் பிடித்து அப்பகுதியில் ஒரு சிவப்பு நிற மிதப்பை கயிறு மூலம் கட்டி மிதக்க விட்டு சென்றனர். ஆனால் அதன் அறிக்கை விவரங்களை புதுச்சேரி சுற்றுச்சூழல் துறை, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் சமர்ப்பிக்கவில்லை. இந்த நிலையில் தேசிய பசுமை தீர்ப்பாய நீதிபதி அருண் குமார் தியாகி மற்றும் சத்யகோபால் கோர்லபதி ஆகியோர் விசாரணை நடத்தினர். மேலும் வரும் ஜூலை, 31ம் தேதிக்கு முன்பாக, கடலில் நடத்திய ஆய்வு அறிக்கை விவரத்தை தாக்கல் செய்ய வேண்டி, சுற்றுச்சூழல் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை