| ADDED : ஆக 07, 2024 05:42 AM
புதுச்சேரி : நெல்லித்தோப்பு தொகுதியில் தேவையான இடங்களில் புதிய குடிநீர் குழாய்களை அமைக்க வேண்டும் என, அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்பு குழு மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர் கோரிக்கை விடுத்துள்ளார்.அவர், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:நெல்லித்தோப்பு தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பல ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட குடிநீர் குழாய்கள் மாற்றப்படாமல், குடிநீர் அசுத்தமாகவும், உப்பு நீர் கலந்தும் வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.குடிநீர் பிரிவு சார்பில், குழு ஒன்றை அமைத்து நெல்லித்தோப்பு தொகுதியில் உள்ள அனைத்து பகுதிகளிலும் குடிநீர் மாதிரி சேகரித்து அதன் தரம் ஆராய்ந்து தேவையான இடங்களில் புதிய குடிநீர் குழாய்களை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.சில இடங்களில், குடிநீர் அழுத்தம் குறைவாக வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். அது போன்ற பிரச்னைகளையும் தீர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.