| ADDED : மார் 23, 2024 11:35 PM
புதுச்சேரி: சுப்ரமணிய சுவாமி கோவிலில், பங்குனி உத்திர பிரம்மோற்சவத்தையொட்டி, திருத்தேர் உற்சவம் நடந்தது.புதுச்சேரி, சஞ்சய் காந்தி நகர், சுப்ரமணிய சுவாமி கோவிலில், பங்குனி உத்திர பிரம்மோற்சவம் கடந்த, 16ம் தேதி துவங்கியது. தொடர்ந்து, தினசரி சுவாமிக்கு பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடந்து வருகின்றன.திருத்தேர் உற்சவம் நேற்று நடந்தது. இதில் தி.மு.க., பொதுக்குழு உறுப்பினர் கோபால், தொகுதி செயலாளர் சக்திவேல், இலக்கிய அணி அமைப்பாளர் சீனு மோகன்தாசு, தொகுதி பிரதிநிதி பொன்னுசாமி, கிளைச் செயலாளர் முருகன், மூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.பிரம்மோற்சவ விழா நாளை நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை ஆலய தனி அதிகாரி சீனு மோகன்தாஸ் மற்றும் ஆலய நிர்வாகிகள் செய்துள்ளனர்.