உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஏசி வசதியுடன் போலீஸ் கூண்டு

ஏசி வசதியுடன் போலீஸ் கூண்டு

புதுச்சேரி : சிக்னலில் ஏசி வசதியுடன் அமைப்பதற்காக போலீஸ் கூண்டு புதுச்சேரி போலீஸ் தலைமையகத்திற்கு வந்துள்ளது.புதுச்சேரியில் உள்ள சிக்னல்களில் பணி செய்யும் போக்குவரத்து போலீசார் வெயில் காலங்களில் அவதிப்பட்டு வந்தனர். அவ்வாறு பணி செய்யும் போலீசாருக்கு ஏசி வசதியுடன் கூடிய தலைக்கவசம் கொடுப்பதற்கான திட்டம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில் தற்போது புதுச்சேரியில் உள்ள டிராபிக் சிக்னல்களில் பணி செய்யும் போக்குவரத்து போலீசாருக்கு ஏசி வசதியுடன் கூடிய போலீஸ் கூண்டு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.அதன்படி ஒரு போலீஸ் கூண்டு ரூ. 5 லட்சம் செலவில் ஏசி வசதியுடன் அமைக்கப்பட்டு போலீஸ் தலைமையகத்தின் எதிரில் வைக்கப்பட்டுள்ளது. இந்த ஏசி வசதியுடன் கூடிய போலீஸ் கூண்டு விரைவில் டிராபிக் சிக்னலில் வைக்கப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி