உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / திருக்கனுாரில் போலீசார் கொடி அணிவகுப்பு 

திருக்கனுாரில் போலீசார் கொடி அணிவகுப்பு 

திருக்கனுார்: லோக்சபா தேர்தலை முன்னிட்டு, திருக்கனுார் போலீசார், மத்திய தொழில் பாதுகாப்பு படையினருடன் இணைந்து கொடி அணிவகுப்பு நேற்று மேற்கொண்டனர். புதுச்சேரி லோக்சபா தேர்தலை முன்னிட்டு 100 சதவீதஓட்டுப்பதிவு வலியுறுத்தியும், பொதுமக்களுக்கு அச்சமின்றி ஓட்டு அளிப்பதற்கான பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், திருக்கனுார் இன்ஸ்பெக்டர் ராஜகுமார் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட போலீசார் நேற்று கொடி அணிவகுப்பு நடத்தினர்.திருக்கனுார் பஜார் வீதியில் துவங்கிய போலீஸ் கொடி அணிவகுப்பு டி.வி.மலை ரோடு, கே.ஆர்.பாளையம், கூனிச்சம்பட்டு, மணலிப்பட்டு உள்ளிட்ட கிராமங்களின் வழியாக சென்று, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை