உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சிறையில் மொபைல் வைத்திருந்த கைதியிடம் போலீசார் விசாரணை

சிறையில் மொபைல் வைத்திருந்த கைதியிடம் போலீசார் விசாரணை

புதுச்சேரி: காலாப்பட்டு சிறையில் மொபைல் போன் வைத்திருந்த கைதி மீது வழக்குப் பதிந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.காலாப்பட்டு சிறையில் தண்டனை கைதிகள் 300க்கும் மேற்பட்டடோர் சிறையில் உள்ளனர். சிறையில் உள்ள கைதிகள் மொபைல் போனை பயன்படுத்தி வருவதாக புகார் எழுந்தது.அதையடுத்து, சிறையில், மொபைல் போன் சிக்னல் தடுக்கும் ஜாமர் கருவி பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் சில நேரங்களில் அந்த கருவி செயல்படால் இருப்பதால் சிறை கைதிகள் இதை சாதகமாக பயன்படுத்தி வருகின்றனர்.இந்நிலையில், கடந்த 26ம் தேதி சிறையில் உள்ள கைதிகளின் அறைகளை சிறைத்துறை வார்டன்கள் திடீரென சோதனை நடத்தினர். இதில் கைதி மாரிமுத்து மொபைல் போன் வைத்திருந்தது தெரியவந்தது.அவரிடமிருந்து மொபைல் போனை பறிமுதல், செய்து, அவரை, காலாப்பட்டு போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவர் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை