உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இரண்டு பைக் திருட்டு போலீசார் விசாரனை

இரண்டு பைக் திருட்டு போலீசார் விசாரனை

புதுச்சேரி : புதுச்சேரியில் இரு இடங்களில் நிறுத்திய பைக் திருட்டு குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.சாரம் கவிக்குயில் நகரைச் சேர்ந்தவர் வேலு, 50. இவர் கடந்த மாதம் 29ம் தேதி தனக்கு சொந்தமான பைக்கில், கருவடிக்குப்பத்தில் உள்ள சித்தானந்தா கோவிலுக்கு சென்றார். பைக்கை நிறுத்தி விட்டு கோவில் உள்ளே சென்று திரும்ப வந்து பார்த்தபோது பைக்கை காணவில்லை. இதுகுறித்து லாஸ்பேட்டை போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். இதேபோல் காமராஜர் நகரைச் சேர்ந்த சீரஞ்சிவீ, 26, என்பவரது பைக்கை கடந்த 30ம் தேதி காணவில்லை. இதுகுறித்து பெரியக்கடை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ