உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பேச்சு போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசு

பேச்சு போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசு

புதுச்சேரி: புதுச்சேரியில்நடந்த பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.புதுச்சேரி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை சார்பில், அப்துல்கலாம் கோளரங்கத்தில், 'சூரிய குடும்பம்' குறித்த பேச்சுப்போட்டி நடந்தது. இதில் அரசு மற்றும் தனியார் பள்ளியில், சிறந்த பேச்சாளர்களாக, தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.காஞ்சி மாமுனிவர் அரசினர் பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவன ஆங்கிலத் துறைத் தலைவர் ராஜவேலு, ஆங்கில பேச்சு போட்டிக்கும், தமிழ்த்துறைத் தலைவர் கிருஷ்ணகுமார் தமிழ் பேச்சுப்போட்டிக்கும் நடுவராக பங்கேற்றனர்.இதில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு சான்றிதழோடு ஊக்கத் தொகையும் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, கோளரங்கத்தின் அலுவலர்களும், பணியாளர்களும் மேற்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ