உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஆசிரியர் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு பெற்றோர் குழந்தைகளை அழைத்து சென்றதால் பரபரப்பு

ஆசிரியர் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு பெற்றோர் குழந்தைகளை அழைத்து சென்றதால் பரபரப்பு

அரியாங்குப்பம்: பணி இடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியை மீண்டும் பள்ளிக்கு வரவேண்டும் என பெற்றோர், தங்களது குழந்தைகளை அழைத்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.தவளக்குப்பம் அடுத்த பூரணாங்குப்பத்தில் அரசு நடுநிலைப் பள்ளி உள்ளது. அங்கு பணிபுரிந்த ஆசிரியை ஒருவர், காரைக்காலுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். மாணவர்களிடம் அன்பாக பழகி முறையாக பாடம் நடத்திய ஆசிரியை இடமாற்றம் செய்யப்பட்டதை அறிந்த மாணவர்களின் பெற்றோர் சிலர் பள்ளி தலைமை ஆசிரியரிடம் ஆசிரியை இடமாற்றம் செய்யக்கூடாது என வலியுறுத்தி வந்தனர்.இந்நிலையில், இடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியை மீண்டும் பள்ளிக்கு வந்தால், தான் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவோம் என கூறி பெற்றோர் நேற்று பள்ளியில் இருந்து குழந்தைகளை வீட்டுக்கு அழைத்து சென்றனர்.பள்ளி தலைமை ஆசிரியர், பெற்றோரிடம், கல்வி உயரதிகாரியிடம் இதைபற்றி தெரிவிப்பதாக கூறியும் குழந்தைகளை வீட்டிற்கு அழைத்துச்சென்ற சம்பவம் பள்ளியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை