உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சென்டாக் திருத்தப் பட்டியல் வெளியீடு

சென்டாக் திருத்தப் பட்டியல் வெளியீடு

புதுச்சேரி : திருத்தப்பட்ட தரவரிசைப் பட்டியல் சென்டாக் இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.இது குறித்து சென்டாக் ஒருங்கிணைப்பாளர் அமான் சர்மா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:கல்லுாரிகளில் சேருவதற்கான சென்டாக் மாணவர் சேர்க்கைக் கான வரைவு தரவரிசைப் பட்டடியல் கடந்த 14ம் தேதி சென்டாக் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதில் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் மாணவர்கள் தெரிவிக்குமாறு சென்டாக் நிர்வாகம் கேட்டுக் கொண்டது.இதன்படி மாணவர்கள் தங்களது ஆட்சே பனைகளை தெரிவித்தனர். அவர்களது ஆட்சே பனைகளை ஏற்று திருத்தப்பட்ட தரவரிசைப்பட்டியல் சென்டாக் இணையதளத்தில் நேற்று இரவு வெளியிடப்பட்டது.மேலும் விளையாட்டு வீரர், மாற்று திறனாளிகளுக்கான வரைவு தரவரிசைப் பட்டியலும்நேற்று வெளியிடப்பட்டுள்ளது.இதில் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் வரும் 26ம் தேதிக்குள் தெரிவிக்குமாறு சென்டாக் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை