உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நெல் மூட்டை துாக்கும் புதுச்சேரி மாஜி அமைச்சர்: சமூக வலைத்தளத்தில் வீடியோ வைரல்

நெல் மூட்டை துாக்கும் புதுச்சேரி மாஜி அமைச்சர்: சமூக வலைத்தளத்தில் வீடியோ வைரல்

புதுச்சேரி : புதுச்சேரியில் முன்னாள் வேளாண்துறை அமைச்சர் நெல் மூட்டைகளை துாக்கி செல்லும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்டம், திருநள்ளார் தொகுதியைச் சேர்ந்தவர் முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணன். இவரது பூர்வீக தொழில் விவசாயம். இவருக்கு அம்பகரத்துார், நல்லம்பல் பகுதியில் பல ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. அதில் நெல், உளுந்து பயிரிட்டு வருகிறார். கடந்த 2016 சட்டசபை தேர்தலில் காங்., கட்சி சார்பில் திருநள்ளார் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று காங்., ஆட்சியில் வேளாண் துறை அமைச்சராக இருந்தார்.கடந்த 2021 சட்டசபை தேர்தலில் தோல்வியுற்றதால், அரசு அலுவலகங்கள், கோப்புகள் என பிசியாக இருந்த அமைச்சர் அதன்பிறகு விவசாய பணிகளில் மூழ்கி விட்டார். தனது விவசாய நிலத்தில் நெல் பயிரிடுவதில் பிசியாக உள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு அம்பகரத்துார் சின்ன கடை தெருவில் உள்ள தனியார் கடைக்கு லுங்கி, பனியன் அணிந்து கொண்டு டிராக்டரில் வந்த முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணன், தனது விவசாய நில கூலி தொழிலாளியுடன் நெல் மூட்டைகளை கடைக்கு இறக்கி வைக்கும் வீடியோக சமூக வலைத்தளத்தில் வைரலாகியது.வீடியோவில், அங்கிருந்த பொதுமக்கள் நாங்கள் ஓட்டு போட்டோம். நீங்கள் இந்த வேலை பார்க்கிறீர்கள் என கேட்கிறார். அதற்கு, முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணன், 'இந்த வேலை செய்தால் தான் சாப்பாட்டுக்கு அரிசி கிடைக்கும்' எனவும், எதிரில் நின்றிருந்த காய்கறி பயிரிடும் விவசாயியை கையை நீட்டி காண்பித்து, அந்த நபர் காய்கறி பறிக்கவில்லை என்றால், குழம்பு வைக்க முடியுமா ? என நகைப்புடன் கூறிக் கொண்டு அடுத்த மூட்டை இறக்கும் வேலையில் ஈடுப்பட்டார். முன்னாள் அமைச்சர் மூட்டை துாங்கும் வீடியோக சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

mahalingam
ஏப் 27, 2024 19:14

நல்ல செயல் வாழ்க வளமுடன்


S R George Fernandaz
ஏப் 27, 2024 10:01

நெல் மூட்டை துாக்கும் புதுச்சேரி மாஜி அமைச்சர் உண்மையான அமைச்சர் இந்த காலத்திலேயும் இப்படி ஒரு மனுஷன் இவரை மாதிரி பேர் இருந்தால் போதும் தமிழ்நாடு என்ன இந்தியா தான் உலக மகா வல்லரசு சூப்பர்


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை