உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரி சபாநாயகர் மத்திய அமைச்சர்களுக்கு வாழ்த்து

புதுச்சேரி சபாநாயகர் மத்திய அமைச்சர்களுக்கு வாழ்த்து

புதுச்சேரி: புதுச்சேரி சபாநாயகர் செல்வம் தலைமையில், பா.ஜ., நிர்வாகிகள், மத்திய அமைச்சர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.இந்தியாவின் பிரதமராக மூன்றாவது முறையாக, பிரதமர் மோடி பதவியேற்றார். அவரது அமைச்சரவையில், மத்திய அமைச்சர்களாக கிஷன் ரெட்டி, முருகன், அர்ஜுன் ராம் மேக்வால் ஆகியோர் பொறுப்பேற்றுக்கொண்டனர்.இதைத்தொடர்ந்து, புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட, இந்த மத்திய அமைச்சர்களை, புதுச்சேரி சபாநாயகர் செல்வம் தலைமையில் எம்.எல்.ஏ.,க்கள் ஜான்குமார், ரிச்சர்டு, ராமலிங்கம், மாநில செயலாளர்கள் ஜெயக்குமார், ரத்தினவேல், விவசாய அணித்தலைவர் ராமு ஆகியோர் நேரில் சந்தித்து, வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ