உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வயநாட்டில் நிலச்சரிவால் பாதித்தவர்களுக்கு நிவாரணம்

வயநாட்டில் நிலச்சரிவால் பாதித்தவர்களுக்கு நிவாரணம்

புதுச்சேரி: வயநாடு பகுதி நிலச்சரிவால் பாதித்தவர்களுக்கு முத்து ரத்தின அரங்கம் மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில், வசூலிக்கப்பட்ட நிவாரணத் தொகை திட்ட ஒருங்கிணைப்பாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.புதுச்சேரி, கவுண்டன்பாளையம் முத்து ரத்தின அரங்கம் மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் கனமழை, நிலச்சரிவால் உயிரிழந்த குடும்பத்தினருக்கும், பாதிக்கப் பட்டவர்களுக்கும் நிவாரணத் தொகை நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்களிடம் வசூலிக்கப்பட்டது.வசூலிக்கப்பட்ட நிவாரணத் தொகை ரூ. 11,250 மாநில அளவிலான நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் சதீஷ்குமார், பள்ளி அளவிலான நாட்டு நலபணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் மதிவாணன் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது.புதுச்சேரி மாநில கோஜூரியோ கராத்தே சங்க மாநில செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன் நிகழ்ச்சியை வழிநடத்தினார். பள்ளி முதல்வர் கவிதா சுந்தர்ராஜன் முன்னிலை வகித்தார்.ஏற்பாடு களை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ஜெயந்தி, பள்ளியின் பொறுப்பாளர்கள் ஜஸ்டின், ஜீவா ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை