உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / குரூப்-பி பதவியில் இட ஒதுக்கீடு; மறுப்பு அறிவிப்பை ரத்து செய்ய வலியுறுத்தல்

குரூப்-பி பதவியில் இட ஒதுக்கீடு; மறுப்பு அறிவிப்பை ரத்து செய்ய வலியுறுத்தல்

புதுச்சேரி : அரசிதழ் பதிவுப் பெறாத குரூப்--பி பணியிடங்களில் இடஒதுக்கீடு மறுத்து வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என, மக்கள் உரிமைக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.இது குறித்து மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் சுகுமாரன் கவர்னர், முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு;புதுச்சேரியில் கடந்த 2022ம் ஆண்டு துறைமுகத் துறையில் இளநிலைப் பொறியாளர் உள்பட 9 அரசுத் துறைகளில் மொத்தம் 180 அரசிதழ் பதிவுப் பெறாத குரூப்-பி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பாணை வெளியிட்டது. இதில் புதுச்சேரியில் நடைமுறையில் உள்ள மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 18 சதவீதம், மிக மிக பிற்படுத்தப்பட்டோர் 2 சதவீதம், பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் 2 சதவீதம், பிற்படுத்தப்பட்ட பழங்குடியினர் 0.5 சதவீதம் ஆகிய வகுப்பினருக்கான இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை. பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக இயக்கங்கள் போராடியதன் விளைவாக 2023-ல் அரசிதழ் பதிவுப் பெறாத குரூப்-பி பணியிடங்களில் இடஒதுக்கீடு வழங்க அரசாணை வெளியிடப்பட்டது.ஆனால், 9 துறைகளுக்கான 180 சான்றிதழ் பதிவுப் பெறாத பணிடங்களை நிரப்புவதில் இச்சமூகங்களுக்கு இடஒதுக்கீடு வழங்க முடியாது என, நிர்வாகம் மற்றும் சீர்திருத்தத்துறை சார்புச் செயலர் அறிவிப்பாணை வெளியிட்டுள்ளார். இது சமூக நீதிக்கு எதிரானது. அரசிதழ் பதிவுப் பெறாத குரூப்--பி பணியிடங்களில் இடஒதுக்கீடு மறுத்து வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி