உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மின்சாரம் தாக்கி மின் கம்பத்தில் சிக்கிய ஒயர்மேன் தீயணைப்பு வீரர்கள் மீட்பு 

மின்சாரம் தாக்கி மின் கம்பத்தில் சிக்கிய ஒயர்மேன் தீயணைப்பு வீரர்கள் மீட்பு 

புதுச்சேரி : சாரம் லெனின் வீதி சந்திப்பு மின் கம்பத்தில் மின்கம்பிகள் சரிசெய்யும் பணியின்போது மின்சாரம் தாக்கி சிக்கி கொண்ட ஊழியரை தீயணைப்பு துறையினர் மீட்டனர். புதுச்சேரி லெனின் வீதியில் சாலை மற்றும் வாய்க்கால் அமைக்கும் பணி நடந்து வருகிறது. நேற்று அப்பகுதியில் மின் கம்பி அறுந்து பழுது ஏற்பட்டது. இதனை மின்துறை ஊழியர்கள் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். தென்னஞ்சாலையைச் சேர்ந்த ஒயர்மேன் சிவக்குமார், 49; சாரம் லெனின் வீதி சந்திப்பில் உள்ள மின் கம்பத்தில் ஏறி மின் பழுதை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். சக மின்துறை ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் மின் கம்பத்தின் கீழ் சாலையில்நின்றிருந்தனர். பழுது சரிசெய்யும் பணியின் போது சிவக்குமார் மீது திடீரென மின்சாரம் பாய்ந்தது.மின் கம்பத்தின் கீழ் நின்றிருந்த ஊழியர்கள் சத்தம் எழுப்பி மின் இணைப்பு துண்டித்தனர். மின்சாரம் தாக்கியதில் சிவக்குமாருக்கு காலில் காயம் ஏற்பட்டு, மின் கம்பத்தில் இருந்து கீழே இறங்க முடியாமல் கம்பத்தில் சிக்கி கொண்டார்.புதுச்சேரி தீயணைப்பு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் ஜே.சி.பி. உதவியுடன், மின் கம்பத்தில் சிக்கி கொண்ட சிவக்குமாரை மீட்டனர். ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். மின் கம்பத்தில் மின்துறை ஊழியர் சிக்கி கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ