உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வேதங்கள் உணர்த்தும் தர்மத்தை சாத்திரத்தால் தான் அறிய முடியும் ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்திரன் சொற்பொழிவு 

வேதங்கள் உணர்த்தும் தர்மத்தை சாத்திரத்தால் தான் அறிய முடியும் ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்திரன் சொற்பொழிவு 

புதுச்சேரி : வேதங்கள் காட்டும் நெறிகளை முழுமையாகப் புரிந்துகொள்ள ஒரு மானுடப் பிறவி போதாது என ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்திரன் பேசினார்.ராமநவமியை முன்னிட்டு முத்தியால் பேட்டை ராமகிருஷ்ணா நகர் லட்சுமி ஹயக்ரீவர் கோவில் ராமாயணம் என்ற தலைப்பில் மூன்று நாட்களுக்கு சிறப்பு சொற்பொழிவு நடக்கின்றது.முதல் நாளான நேற்றைய சொற்பொழிவில் ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்திரன் ஆற்றிய உரை:நமது சனாதன மதத்திற்கும், கலாசாரத்திற்கும் தர்மத்தோடு கூடிய வாழ்க்கை முறைக்கும் ஆணிவேராக இருப்பது வேதங்கள். வேதங்கள் பரப்பிரம்மத்திடமிருந்து தோன்றியவை.வேதாந்தங்களின் உட்பொருளை விளக்குபவை இதிகாசங்களும், புராணங்களும். இதிகாச புராணங்களை அறியாமல் வேத, வேதாந்தங்களின் பொருள் உணரமுடியாது. ஆகையால் தான் தர்ம நெறிகளையும் வாழ்க்கை நெறிகளையும் போதிக்கும் ராமாயணத்தை துணை வேதம் என்றும் மஹாபாரதத்தை ஐந்தாம் வேதம் என்றும் சொல்வார்கள்.வேதங்கள் காட்டும் நெறிகளை முழுமையாகப் புரிந்துகொள்ள ஒரு மானுடப் பிறவி போதாது.பகவான் நாராயணன் ராமனாக. அவதரித்த போது, வேதங்கள் ராமயணமாக அவதரித்தன என்று பெரியோர்கள் போற்றுவார்கள். 24 எழுத்துக்கள் கொண்ட் காயத்ரி மந்திரத்தின் ஒவ் வொரு எழுத்துக்கும் ஆயிரம் ஸ்லோகம் என்று 24000 ஸ்லோகங்களைக் கொண்டது. ராமாயண காவியத்தின் நாயகன் ராமபிரான் அனைத்து நற்குணங்களுக்கும் இருந்ததுடன், தான் கொண்ட தர்மங்களிலிருந்து இம்மியளவும் பிறழாமல் வாழ்ந்து காட்டியவர்.வேதங்கள் உணர்த்தும் தர்மத்தை சாத்திரத்தால் தான் அறிய முடியும். ராமனிடமிருந்து தான் தர்மம் தெரிந்து கொள்கிறோம். தர்மத்தின் தனி மூர்த்தியாக, மனிதனாய் பிறந்து, மாமனிதாய் வாழ்ந்து, இன்பத்தையும் துன்பத்தையும் சமமாகப் பாவித்து, தான் கொண்ட தர்மத்திலிருந்து இம்மி அளவும் பிறழாமல் வாழ்ந்து, வழிக்கட்டிய தெய்வம் ராமன்.ராம நாமம் ஜபித்து நன்மை பெறுவோம்.இவ்வாறு அவர் சொற்பொழிவாற்றினார்.இரண்டாவது நாளாக இன்று இரவு 7 மணி முதல் 8 மணி வரை ராமாயண சொற்பொழிவு நடக்கின்றது.நாளை 17ம் தேதியுடன் சொற்பொழிவு நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை