உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கம்பன் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு மோதிரம்

கம்பன் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு மோதிரம்

நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் கம்பன் அரசு மேல்நிலைப் பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு தங்க மோதிரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.பள்ளி துணை முதல்வர் தில்லைக்கண்ணு காமராஜ் தலைமை தாங்கினார். விரிவுரையாளர் எழில்வேந்தன் வரவேற்றார். தலைமையாசிரியை மதனசுந்தரி வாழ்த்துரை வழங்கினார். ஆசிரியர் மணிமாறன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.சமூக ஆர்வலர் தனபூபதி கடந்தாண்டு 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் முதல் இரண்டு இடங்களை பிடித்த மாணவர்களுக்கு 2 கிராம் தங்க மோதிரம் வழங்கினார்.பள்ளி நுாகலர் கலியமூர்த்தி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி