உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / 6 பேரிடம் ரூ.27.55 லட்சம் அபேஸ்

6 பேரிடம் ரூ.27.55 லட்சம் அபேஸ்

புதுச்சேரி: புதுச்சேரியில், 6 பேரிடம் 27.55 லட்சம் ரூபாய் மோசடி செய்த மர்ம கும்பலை சைபர் கிரைம் போலீ சார் தேடி வருகின்றனர்.புதுச்சேரி, நைனார்மண்டபம் பகுதியை சேர்ந்தவர் பாலாஜி. இவர், திருமணத்திற்காக மேட்ரிமோனி மூலம் பெண் தேடி வந்தார். அதையடுத்து, பெண் ஒருவர் அவரை 'வாட்ஸ் ஆப்' மூலம் தொடர்பு கொண்டு அறிமுகம் ஆனார்.பங்கு சந்தையில், முதலீடு செய்தால், அதிகம் பணம் சம்பாதிக்கலாம் என, ஆசை வார்த்தை கூறினார். அதை நம்பி, 17.15 லட்சம் ரூபாயை முதலீடு செய்து ஏமாந்தார்.முதலியார்பேட்டையை சேர்ந்த வசுந்தராதேவி என்பவரை மர்ம நபர் ஒருவர் தொடர்பு கொண்டு, வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என, கூறினார். அதை நம்பி அவர், 7.27 லட்சம் ரூபாயை முதலீடு செய்து ஏமாந்தார்.அரியாங்குப்பம், பகுதியை சேர்ந்தவர் அம்ரேஷ் என்பவரை தொடர்பு கொண்ட நபர், குறைந்த வட்டிக்கு பணம் கொடுப்பதாக கூறியதை அடுத்து, அவர், முன்பணமாக 85 ஆயிரம் பணம் அனுப்பி ஏமாந்தார். வில்லினுாரை சேர்ந்த பெரியசாமி என்பவரும் 80 ஆயிரம் ரூபாயை அனுப்பி ஏமாந்தார்.அதேபோல், வம்பாகீரப்பாளையத்தை சேர்ந்த காவியா, 80 ஆயிரம் ரூபாய், லாஸ்பேட்டை வைத்தி 68 ஆயிரம் ரூபாய் அனுப்பி ஏமாந்தனர்.இதுகுறித்த புகார்களின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து மோசடி கும்பலை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை