உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி 

மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி 

புதுச்சேரி : லோக்சபா தேர்தலை முன்னிட்டு, புதுச்சேரி தேர்தல் துறை சார்பில், காற்று மாசை கட்டுப்படுத்தும் வகையில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி சாரதா கங்காதரன் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நடந்தது. நிகழ்ச்சியில், தேர்தலில் வாக்களிப்பதில் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாகவும், 100 சதவீதம் வாக்களிப்பை உறுதி செய்திடவும் மாணவர்களிடம் விளக்கி கூறப்பட்டது. பின் மாணவர்கள் வாக்காளரின் உறுதிமொழி எடுக்கப்பட்டது. தொடர்ந்து நாட்டு நலப்பணித் திட்ட தன்னார்வலர்கள் கல்லுாரி வளாகத்தில் மரக்கன்று நட்டனர்.இந்நிகழ்ச்சியில் தேர்தல் பங்களிப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் கோவிந்தசாமி, கல்லூரி பேராசிரியர்கள் செல்வ துர்கா தேவி, சதிஷ்குமார், பிரபாகரன் ஆகி யோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை