உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சட்டசபையில் செங்கோல் அசோக்பாபு எம்.எல்.ஏ., விருப்பம்

சட்டசபையில் செங்கோல் அசோக்பாபு எம்.எல்.ஏ., விருப்பம்

புதுச்சேரி: புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கேட்டு தீர்மானம் நிறைவேற்றுவதற்கு முன், அசோக்பாபு எம்.எல்.ஏ., பேசியதாவது:லோக்சபாவில் செங்கோல் வைக்கப்பட்டுள்ளது. அதுபோல் புதுச்சேரியிலும் செங்கோல் வைக்க வேண்டும். அதன் மூலம் சரித்திர புகழ் நிலை நிறுத்தப்பட வேண்டும் என, தனிநபர் தீர்மானம் கொண்டு வர கடிதம் கொடுத்தேன். அதை ஏன் சபாநாயகர் ஏற்கவில்லை. எதிர்க்கட்சி தலைவர் சிவா: அந்த செங்கோலை செய்யவில்லை. அதனால் ஏற்றுக்கொள்ளவில்லை. ராமலிங்கம் (பா.ஜ): முதல்வர் ரங்கசாமி செங்கோல் ஆட்சி தான் நடத்துகிறார். அதனால் செங்கோல் வைக்கலாம். அசோக்பாபு எம்.எல்.ஏ.,: அரசு அனுமதி அளித்தால் செங்கோலை செய்து கொடுக்க நாங்கள் தயாராக உள்ளோம். நம்முடைய ஆட்சி பாரபட்சமற்றதாக இருந்து வருகிறது. நேர்மையாக நடக்கிறது. செங்கோல் அரசின் சின்னம். அந்த செங்கோலை புதுச்சேரி சட்டசபையில் நிறுவ வேண்டும் என்று தனிநபர் தீர்மானம் கொண்டு வந்தேன். ஏன் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.சபாநாயகர் செல்வம்: அமருங்கள். மாநில அந்தஸ்து குறித்து எதிர்க்கட்சி தலைவர் பேச வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ