உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கடல் எல்லையில் மீனவர்களுக்கு ஏற்படும் பாதிப்பிற்கு அரசு தீர்வுகாண வேண்டும் செல்வகணபதி எம்.பி., கோரிக்கை

கடல் எல்லையில் மீனவர்களுக்கு ஏற்படும் பாதிப்பிற்கு அரசு தீர்வுகாண வேண்டும் செல்வகணபதி எம்.பி., கோரிக்கை

புதுச்சேரி: கடல் எல்லையில் மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது இதற்கு அரசு தீர்வுகாண வேண்டும் என எம்.பி., செல்வகணபதி கோரிக்கை ராஜ்சபாவில் எம்.பி.,யின் கேள்விக்கு மத்திய அரசு அளித்த பதில்:மத்திய மீன்வள அமைச்சகம் மொத்தமாக ரூ. 364 கோடி, பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனாவின் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.இத் திட்டத்தின் மூலம் அனைத்து கடலோர மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசம் உட்பட, தேசிய அளவிலான கப்பல் ,தகவல் தொடர்பு மற்றும் ஆதரவு அமைப்பின் கீழ், 1 லட்சம் மீன்பிடி கப்பல்களில், டிரான்ஸ்பாண்டர் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது.டிரான்ஸ்பாண்டர்கள், புவி வேலி அம்சங்களைக் கொண்டிருக்கின்றன.மேலும் கடல் எல்லையை அடையும்போதும் அல்லது கடல் எல்லையை கடக்கும்போது மீனவர்களுக்கு எச்சரிக்கைகளை வழங்குகின்றன.மேலும், மீனவர்களுக்கு பல்வேறு பயிற்சி அளிக்க காரைக்கால் மாவட்டம், காளிகுப்பத்தில் மீன்பிடி பயிற்சி நிறுவனம் உள்ளது. அங்கு மீனவர்களின் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு தலைப்புகளில் பயிற்சி நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.'கடல் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள்' பற்றிய ஒரு பயிற்சித் திட்டமும், 'மீன்பிடி படகுகளில் ஊடுருவல் கருவிகள் மற்றும் தகவல் தொடர்பு உபகரணங்களைக் கையாளுதல்' பற்றிய மற்றொரு பயிற்சியும் கடந்த 2022, நவம்பரில், சி.ஐ.எப்.என்.இ.டி மூலம் நிறுவனத்தில் நடத்தப்பட்டது.இவ்வாறு தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை