உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கல்லுாரியில் கருத்தரங்கு

கல்லுாரியில் கருத்தரங்கு

புதுச்சேரி : லாஸ்பேட்டை சமுதாய கல்லுாரி தமிழ்துறை சார்பில் சங்கராச்சாரியார் குறித்த ஒரு நாள் கருத்தரங்கு நடந்தது.தமிழ்த்துறை உதவி பேராசிரியர் அரங்க முருகையன் வரவேற்றார். பேராசிரியர் மாலதி நோக்கவுரையாற்றினார். துணை வேந்தர் (பொறுப்பு) தரணிக்கரசு தலைமை தாங்கினார். சென்னை செம்மொழித்தமிழாய்வு நிறுவனம் இயக்குனர் சந்திரசேகரன் தொடக்கவுரையாற்றினார்.பேராசிரியர் சுடலைமுத்து விளக்கவுரை நிகழ்த்தினார். கல்லுாரி முதல்வர் ராமகிருஷ்ணன், புதுச்சேரி ராமகிருஷ்ணா சார்பில் சுவாமி நிதயேஷ்நந்தா ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர். நிகழ்ச்சியில், இணை பேராசிரியர் சுரேஷ்குமார், உட்பட பேராசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆங்கிலத்துறை உதவி பேராசிரியர் இந்துமதி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை