உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / லாரி டிரைவரிடம் லஞ்சம் வாங்கிய எஸ்.ஐ., ஆயுதப்படைக்கு மாற்றம்

லாரி டிரைவரிடம் லஞ்சம் வாங்கிய எஸ்.ஐ., ஆயுதப்படைக்கு மாற்றம்

விழுப்புரம், : டோல்கேட் அருகே லாரியை நிறுத்தி லஞ்சம் வாங்கிய சப் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீஸ்காரர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர்.திண்டிவனம்-புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலை ரோந்து பிரிவை சேர்ந்த சப் இன்ஸ்பெக்டர் பூமிநாதன், போலீஸ்காரர் அப்துல்ரஷீத் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு மொரட்டாண்டி டோல்கேட் அருகே வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது, அவ்வழியே சென்ற லாரியை நிறுத்தி டிரைவரிடம் லஞ்சம் வாங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.அதனைத் தொடர்ந்து இருவரையும் ஆயுதப்படை பிரிவிற்கு மாற்றி எஸ்.பி., தீபக்சிவாச் நேற்று காலை உத்தரவிட்டார். மேலும், புகார் குறித்து துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிட்டார்.அதன்பேரில் கோட்டக்குப்பம் டி.எஸ்.பி., சுனில் விசாரணை நடத்தி வருகிறார். புகார் உறுதி செய்யப்பட்டால் 'சஸ்பெண்ட்' செய்து மேல்நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி