உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பைரவருக்கு சிறப்பு அபிேஷகம்

பைரவருக்கு சிறப்பு அபிேஷகம்

பாகூர்,: பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில் உள்ள கால பைரவருக்கு, ஆடி மாத அமாவாசை மற்றும் முதல்வர் ரங்கசாமியின் பிறந்த நாளையொட்டி சிறப்பு அபி ேஷக ஆராதனைகள் நடந்தது.பாகூரில் 1400 ஆண்டுகள் பழமை வாய்ந்த வேதாம்பிகை சமேத மூலநாதர் சுவாமி கோவில் உள்ளது.இக்கோவிலில், நேற்று ஆடி அமாவாசை மற்றும் முதல்வர் ரங்கசாமியின் பிறந்த நாளையொட்டி, கால பைரவருக்கு சிறப்பு அபிேஷக ஆராதனைகள் நடைபெற்றது. அதனையொட்டி, காலை 6.00 மணிக்கு மூலநாதர், வேதாம்பிகையம்மன், பாலவிநாயகர், முருகர் உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது.தொடர்ந்து, காலை 10.00 மணிக்கு, கோவிலில் வடகிழக்கு திசையில் மேற்கு பார்த்து அருள் பாலித்து வரும் கால பைரவருக்கு, பால், தயிர், தேன், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிேஷக ஆராதனைகள் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. செந்நிற மலர்கள் சிறப்பு அலங்காரத்தில் கால பைரவர் பக்தர்களுக்கு அருள் பாளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்