| ADDED : மே 13, 2024 05:08 AM
புதுச்சேரி: புனித பேட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் நுாறு சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். புதுச்சேரி புனித பேட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவ, மாணவிகள், நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு எழுதிய மாணவி அபர்னா, தீபா ஆகிய இருவரும் 496 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பெற்றுள்ளனர். மாணவிகள் அமிர்தா, நிக் ஷித்தா ஆகிய இருவரும் 494 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடத்தையும், சாதனா 493, மூன்றாம் இடத்தையும், நிவேதித்தா 492 மதிப்பெண் பெற்று நான்காம் இடத்தையும் பெற்றுள்ளனர். மேலும் கணித பாடத்தில் 25 பேர், அறிவியல் பாடத்தில் 12 பேர், சமூக அறிவியல் பாடத்தில் 6 பேர் நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் பெற்றுள்ளனர்.சாதனை படைத்த மாணவ, மாணவிகளை பள்ளி தாளாளர் ரெஜிஸ் பிரடெரிக் மருத்துவ இயக்குனர் ஜீத்தா பிரடெரிக், முதல்வர் அல்போன்ஸ் ஹில்டா ஆலோசனை குழு உறுப்பினர்கள் கல்பனா, முத்துகுமரன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.