உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பூக்கடைக்காரருக்கு கத்தி குத்து: மூவருக்கு வலை

பூக்கடைக்காரருக்கு கத்தி குத்து: மூவருக்கு வலை

புதுச்சேரி: பூக்கடை உரிமையாளரை கத்தியால் குத்திய 3 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.முத்தியால்பேட்டையை சேர்ந்தவர் ரத்தின வேல், 44; இவர், அதே பகுதியில் பூக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், ரத்தின வேலுக்கும் அவரது உறவினரான நவீனுக்கும் இடையே முன்விரோத தகராறு இருந்து வந்தது.அதையடுத்து, நேற்று பூக்கடையில் இருந்த ரத்தினவேலுவை, நவீன் மற்றும் இருவர் சேர்ந்து, கத்தியால் குத்தி விட்டு, அங்கிருந்து தப்பியோடினர். இதில், படுகாயமடைந்த, ரத்தினவேல், அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து நவீன் உட்பட 3 பேரை தேடிவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ