உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ராட்சத விளம்பர பலகைகளின் உறுதி தன்மை ஆய்வு செய்ய வேண்டும் ராமலிங்கம் எம்.எல்.ஏ., வலியுறுத்தல்

ராட்சத விளம்பர பலகைகளின் உறுதி தன்மை ஆய்வு செய்ய வேண்டும் ராமலிங்கம் எம்.எல்.ஏ., வலியுறுத்தல்

புதுச்சேரி : அனைத்து ராட்சத பேனர்களை,விளம்பர பலகைகளில் உறுதி தன்மை ஆய்வு செய்ய வேண்டும் என ராமலிங்கம் எம்.எல்.ஏ., வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:மும்பையில் சமீபத்தில் மிகப்பெரிய ராட்சத பேனர் சரிந்து விழுந்து பல உயிர் சேதம் ஏற்பட்டது. இதுபோன்ற துரதிஷ்ட சம்பவம் புதுச்சேரியில் நடக்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.பேனர்கள் முறையாக அனுமதி பெற்று பாதுகாப்பான முறையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.அதன் பிறகே அனுமதி வழங்கவேண்டும்.நகரின் முக்கிய சாலைகளில் ரிப்ளக்டர்கள் இல்லாத நிலை உள்ளது. அதனை ஆய்வு செய்து ரிப்ளக்டர் அமைக்க வேண்டும். சி.சி.டி.வி.,கள் அனைத்தும் நகர பகுதிகளில் முறையாக செயல்படுகிறதா என்பதையும் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.பா.ஜ., என்.ஆர் காங் கூட்டணி ஆட்சியில் புதிதாக போடப்படும் சாலைகள் அனைத்தும் அகலமாக உள்ளது. அதே நேரத்தில் வாகன ஓட்டிகள் ,ஒரு வழி பாதையில் செல்கின்றனர். வாகன ஓட்டிகள் எதிர் திசையில் வருவதால் விபத்துகள் அதிக அளவில் நடக்கிறது.இதை தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்கவேண்டும். நகரில் சாலைகளை ஆக்கிரமித்து வாகனங்கள் நிறுத்தப்படுவது மக்களுக்கு இடையூறாக உள்ளது. அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து அகற்ற வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்