| ADDED : ஜூன் 26, 2024 10:57 PM
புதுச்சேரி: சுகாதாரத்துறை ஊழியர்களின் வாரிசுதாரர்கள் அரசு வேலை வழங்க கோரி, ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.புதுச்சேரி சுகாதாரத்துறை ஊழியர்களின் வாரிசுதாரர்கள் நலச்சங்கம் சார்பில், கருணை அடிப்படையில் வழங்கப்படும் வாரிசுதாரர்கள் பணி நியமனத்திற்கு விண்ணப்பித்துள்ள அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் ஒரு முறை தளர்வு அளித்து பணி வழங்க வலியுறுத்தி ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நேற்று நடந்தது.செயின்ட் ழான் வீதியில் நடந்த போராட்டத்திற்கு, ஒருங்கிணைப்பாளர் டேவிட் தலைமை தாங்கினார். துணை ஒருங்கிணைப்பாளர் ரமேஷ், நிர்வாகிகள் ஜெயந்தி, கோபிநாத் முன்னிலை வகித்தனர். அரசு ஊழியர்கள் சங்கங்களின் சம்மேளன கவுரவ தலைவர் பிரேமதாசன் உண்ணாவிரத போராட்டத்தை துவக்கி வைத்தார்.சம்மேளன நிர்வாகிகள் ஆனந்தகணபதி, சிவஞானம், இளங்கோவன், சுகாதார சம்மேளன தலைவர் முனுசாமி, பொதுச்செயலாளர் ஜவகர், துணை பொதுச்செயலாளர் ஜெகநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.