உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பா.ஜ.,வுக்கு ஆதரவாக துண்டு பிரசுரம் தி.மு.க.,வினர் எதிர்த்ததால் தள்ளு முள்ளு சிதம்பரத்தில் திடீர் பரபரப்பு

பா.ஜ.,வுக்கு ஆதரவாக துண்டு பிரசுரம் தி.மு.க.,வினர் எதிர்த்ததால் தள்ளு முள்ளு சிதம்பரத்தில் திடீர் பரபரப்பு

சிதம்பரம், : சிதம்பரத்தில், வாக்காளர் பேரவை சார்பில் பா.ஜ.,விற்கு ஆதரவாக துண்டுபிரசுரம் வழங்கியதை தி.மு.க.,வினர் எதிர்த்ததால் இரு தரப்பினருக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பதட்டம் நிலவியது.சிதம்பரத்தில் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு சார்பில், தேசிய வாக்காளர் பேரவை அமைப்பை சேர்ந்த மூவர், 'யாருக்கு ஓட்டு போடுவது என்று புரியவில்லை' என்ற தலைப்பில் விலங்கியம்மன் கோவில் தெருவில் நேற்று பகல் 12 மணிக்கு வீடு வீடாக துண்டு பிரசுரம் வழங்கினர்.அதில், அரசுக்கு எதிராக பல்வேறு கருத்துக்கள் இருந்தை அறிந்த தி.மு.க., கவுன்சிலர் ராஜன், துண்டு பிரசுரத்தில் எந்த கட்சி என்று குறிப்பிடாமல் உள்ளது, பா.ஜ.,வா என கேட்டார். அதில், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனிடையே அங்கு தி.மு.க.,வினர் கூடியதால், இருதரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளு முள்ளு ஏற்பட்டது.தகவலறிந்த சிதம்பரம் போலீசார் விரைந்து சென்று அனுமதியின்றி துண்டுபிரசுரம் வழங்கி மூவரையும் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர்.அதனையடுத்து பா.ஜ.,வினர் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். உடன் தி.மு.க.,வினரும் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். அப்போது, பா.ஜ.,வினர் போலீசார் பிடித்து வந்த மூவரையும் விடுவிக்க வேண்டி ஸ்டேஷனுக்குள் புக முயன்றதால் பரபரப்பு நிலவியது.பின்னர் இருதரப்பினரும், ஒருவரை ஒருவர் தாக்கி கோஷமிட்டபடி சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை