| ADDED : ஜூன் 15, 2024 05:19 AM
புதுச்சேரி: புதுச்சேரி லுாகாஸ் டி.வி.எஸ்., மற்றும் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி இணைந்துகுழந்தைகளுக்கான கோடைக்கால சிறப்பு பயிற்சி முகாம்நடந்தது.நிகழ்ச்சியில் லுகாஸ் டி.வி.எஸ்.,நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களின் 6 முதல் 8 வயது மற்றும் 9 வயது முதல் 13 வயதுகுட்பட்ட 62 குழந்தைகள் இரண்டு குழுக்களாக பங்கு பெற்றனர்.முகாமினை எம்.ஐ.டி., கல்லுாரி தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் தனசேகரன், செயலாளர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன் ஆகியோர் துவக்கி வைத்தனர். எம். ஐ.டி., கல்லுாரி முதல்வர் மலர்க்கண் வரவேற்றார்.லுாகஸ் டி.வி.எஸ்., திருவண்டார்கோவில் கிளை பிளான்ட் தலைவர் சுரேஷ்குமார், மனிதவள தலைவர் அருண்குமார், கணேஷ்,ராஜலட்சுமிஆகியோர் கலந்து கொண்டனர்.முகாமில் குழந்தைகளுக்கு கணிதம், அறிவியல், ஸ்போக்கன் இங்கிலீஷ், ஸ்டெம் டாய்ஸ், ரோபோடிக்ஸ், கம்ப்யூட்டர், அனிமேஷன், கைவினை மற்றும் பாரம்பரிய விளையாட்டுகள் குறித்த வகுப்புகள் நடத்தப்பட்டன.ஸ்டெம் டாய்ஸ் மற்றும் ரோபோக்களை உரு வாக்குதல் பற்றிய செயல்முறைவிளக்கங்கள் அளிக்கப்பட்டது.நிறைவு விழாவில், பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கபட்டது.இந்த கேம்ப் வகுப்புகளைஉன்னத பாரத் அபியான் திட்ட தலைவர் வள்ளி, யூ.பி.ஏ., குழுவை சார்ந்த கல்லுாரி பேராசிரியர்கள் வழங்கினர். ஏற்பாடுகள் வேலை வாய்ப்பு துறை அதிகாரி ஜெயக்குமார் செய்திருந்தார்.