உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கஞ்சா விற்பனை வாலிபர் கைது

கஞ்சா விற்பனை வாலிபர் கைது

அரியாங்குப்பம்: கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.அரியாங்குப்பம் அடுத்த வீராம்பட்டினம் பகுதியில் டியூஷன் மாணர்களை குறி வைத்து கஞ்சா விற்பதாக குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதனையடுத்து, அரியாங்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் கதிரேசன் மற்றும் போலீசார் அந்த பகுதியில் நேற்று ரோந்து சென்றனர்.அங்கு, நின்ற வாலிபரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அவரிடம் கஞ்சா பாக்கெட்டுகள் இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில், வீராம்பட்டினத்தை சேர்ந்த ேஹமதேவ், 23; என தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 5 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 150 கிராம் கஞ்சா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். அவரை நீதிமன்றத்தில், ஆஜர்படுத்தி, காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை