உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கோவில் ஊழியர் தற்கொலை

கோவில் ஊழியர் தற்கொலை

காரைக்கால்: காரைக்காலில் கடன் பிரச்னையில் திருநள்ளாறு கோவில் ஊழியர் துாக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். காரைக்கால் திருநள்ளாறு எடத்தெருவை சேர்ந்த காத்தான்,52; இவர் திருநள்ளாறு கோவிலில் தாளம் போடும் வேலை செய்து வருகிறார்.இவரது மனைவி செல்வி .இவர்களுக்கு இருபிள்ளைகள் உள்ளனர். கடன் பிரச்னையால் அவதியடைந்து வந்தார். நேற்று முன்தினம் குடும்பத்தினர் மங்கலம் கோவில் திருவிழாவுக்கு சென்றுள்ளார். வீட்டில் தனிமையில் இருந்த அவர் வீட்டில் துாக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.திருநள்ளாறு போலீசார் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ