மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
17 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
17 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
17 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
17 hour(s) ago
புதுச்சேரி : 'லீவு' கேட்ட ஏ.எஸ்.ஐ.,யிடம் உயரதிகாரி 'பீஸ்' கேட்ட விவகாரம் குறித்து ஐ.ஜி., விசாரணையை துவக்கி உள்ளார்.புதுச்சேரி போலீஸ் துறையில் ஐ.ஆர்.பி.என்., பிரிவில் பணி புரியும் உதவி சப் இன்ஸ்பெக்டர் ஒருவர், உதவி கமாண்டரிடம் மருத்துவ விடுப்பு கேட்டார். அதற்கு அவர் 'லீவு வேண்டுமானால் எனக்கு ஒரு பீஸ் (விலை மாது) ரெடி பண்ணு' என கேட்ட ஆடியோ சமூக வலைதளத்தில் வைரலாகியது.இந்த விவகாரம் தொடர்பாக புகார் எதுவும் கொடுக்கக்கூடாது என தனது கணவரை அதிகாரிகள் அழைத்து மிரட்டுவதாக உதவி சப் இன்ஸ்பெக்டரின் மனைவி, ஐ.ஆர்.பி.என். தலைமை கமாண்டரிடம் புகார் அளித்தார்.இப்பிரச்னை குறித்து விசாரித்து அறிக்கை சமர்பிக்க டி.ஜி.பி., ஸ்ரீநிவாஸ் உத்தரவிட்டதை தொடர்ந்து, ஐ.ஜி., அஜித்குமார் சிங்லா நேற்று விசாரணையை துவக்கி உள்ளார்.
17 hour(s) ago
17 hour(s) ago
17 hour(s) ago
17 hour(s) ago