உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நாணயங்கள் கொண்டு வந்தவர் ரொக்கமாக மாற்றி மனு தாக்கல்

நாணயங்கள் கொண்டு வந்தவர் ரொக்கமாக மாற்றி மனு தாக்கல்

புதுச்சேரி : பத்து ரூபாய் நாணயங்களை கொண்டு வந்த பார் ஊழியர் நேற்று ரொக்கமாக மாற்றி, வேட்பு மனு தாக்கல் செய்தார்.கிருமாம்பாக்கம் மணமேடுவை சேர்ந்தவர் ராமதாஸ்,59. முள்ளோடையில் உள்ள தனியார் பாரில் வேலை செய்து வருகிறார்.லோக்சபா தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ள அவர், 10 ரூபாய் நாணயத்துடன் கூடிய மூட்டையுடன் வேட்பு மனு தாக்கல் செய்ய நேற்றுமுன்தினம் வந்தார். மொத்தம் 1,250 ரூபாய் 10 ரூபாய் நாணயங்களை கொண்டு வந்தார்.இருப்பினும் பான் எண் குறிப்பிட வேண்டிய இடத்தில் மொபைல் எண்ணை குறிப்பிட்டதால் அவரால் வேட்பு மனு தாக்கல் செய்யமுடியவில்லை.வேட்பு மனுவில் உள்ள பிழைகளை சரி செய்த அவர் நேற்று மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கனிடம் தாக்கல் செய்தார்.இதைத்தொடர்ந்து நேற்று வந்த அவர் 1250 நாணயத்திற்கு பதிலாக ரொக்க பணமாக டிபாசிட் பணத்தை கட்டினார்.லோக்சபா தேர்தலில் போட்டியிட உள்ளவர் ஒரு நாளைக்கு முன் வங்கி கணக்கு ஆரம்பித்து, அதில் டிபாசிட் தொகையை செலுத்தி, அந்த பணத்தை தான் டிபாசிட் செய்ய வேண்டும். அதன்படி அவர்,10 ரூபாய் நாணயத்தை வங்கியில் டிபாசிட் செய்தபோது,அதை பெற்றுக்கொண்ட வங்கி அதிகாரிகள், அதற்கு பதிலாக ரொக்க பணமாக கொடுத்தனர்.இதன் காரணமாகவே சில்லறையை ஏற்க வேண்டிய சிக்கல் எழவில்லை என அதிகாரிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை