உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஆற்றில் மண் எடுத்து ஆக்கிரமித்த வீடியோ வைரல்

ஆற்றில் மண் எடுத்து ஆக்கிரமித்த வீடியோ வைரல்

அரியாங்குப்பம் : தனியார் நிறுவனம் ஆற்றின் கரையை இடத்தை ஆக்கிரமிப்பு செய்து மண் எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.பூரணாங்குப்பம் ஆற்று கரையோரம் தனியார் நிறுவனம் உள்ளது.சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் அந்த நிறுவனம் ஆக்கிரமிப்பு செய்துள்ளது. மேலும், ஆற்றின் இருந்து 40க்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் எடுத்து செல்லும் அளவில் ஆற்றில் இருந்து மண் எடுத்துள்ளனர்.இதனால் கடல் நீர் ஆற்றின் வழியாக ஊருக்குள் வந்து, அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் பாதிக்கப்படும். மேலும், இடையார்பாளையம், பூரணாங்குப்பம் ஆகிய பகுதியில் நிலத்தடி நீர் உப்பு நீராக மாறி மக்களுக்கு குடிநீர் பிரச்னை ஏற்படும்.ஆக்கிரமிப்பு செய்யப் பட்டு, மண் எடுத்த தனியார் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒருவர் வீடியோவில் பேசி, சமூக வலைதளத்தில் விட்டுள்ளார். அந்த வீடியோ வைரலாகி பரவி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை