உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தீப்பிடித்து பெண் பலி

தீப்பிடித்து பெண் பலி

புதுச்சேரி : வீட்டில் விளக்கு ஏற்றும் போது தீப்பிடித்து காயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார்.வில்லியனுார், கூடப்பாக்கம், மேளக்கார வீதியைச் சேர்ந்தவர் மோகனகிருஷ்ணன், 38. இவரது மனைவி லிங்கேஸ்வரி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். லிங்கேஸ்வரி கடந்த 23ம் தேதி நடந்த கோவில் விழாவையொட்டி, வீட்டில் விளக்கு ஏற்றினார்.அப்போது அவரது புடவையில் தீப்பிடித்து எரிந்தது. உடனே அவரை உறவினர்கள் மீட்டு, கடலுார் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை இறந்தார். புகாரின் பேரில் வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை