உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வரதராஜப் பெருமாள் கோவிலில் இன்று தேர்த்திருவிழா

வரதராஜப் பெருமாள் கோவிலில் இன்று தேர்த்திருவிழா

புதுச்சேரி : புதுச்சேரி, காந்தி வீதியில் அமைந்துள்ள வரதராஜப் பெருமாள் கோவிலில், 38ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த 15ம் தேதியன்று, கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, காலையில் பல்லக்கு உற்சவம் மற்றும் திருமஞ்சனமும், மாலையில் சுவாமி வீதியுலாவும் நடந்து வருகிறது.பிரம்மோற்சவத்தின் 9ம் நாள் திருவிழாவான தேர்த்திருவிழா இன்று காலை நடக்கிறது. காலை 7:30 மணிக்கு மேல், 9:00 மணிக்குள் தேர் புறப்பாடாகிறது. மாட வீதிகளில் தேர் வலம் வருகிறது. பின், சுவாமிக்கு திருமஞ்சனம், தீர்த்தவாரி நடக்கிறது.நாளை காலை 10:00 மணிக்கு, 108 கலச திருமஞ்சனமும், நாளை மறுநாள் மாலை தெப்போற்சவமும், வரும் 28ம் தேதி மாலை ஊஞ்சல் உற்சவமும் நடக்கிறது.விழா ஏற்பாடுகளை, ஆலய நிர்வாக அதிகாரி சீனுவாசன், அர்ச்சகர்கள் ஸம்பத்ராகவ பட்டாச்சாரியார், வெங்கட்ரமண பட்டாச்சாரியார், நரேஷ்குமார் பட்டாச்சாரியார் மற்றும் ஆலய ஊழியர்கள், உற்சவதாரர்கள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை