மேலும் செய்திகள்
முன்னாள் மாணவர்கள் மாலை நேர சிற்றுண்டி வழங்கல்
14 hour(s) ago
கிராம வங்கியில் புதுச்சேரி ஐஸ்வர்யம் திட்டம் துவக்கம்
14 hour(s) ago
சியாமளா நவராத்திரி விழா
14 hour(s) ago
திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை
15 hour(s) ago
பாகூர் : கன்னியக்கோவில் பச்சைவாழியம்மன் கோவில் தீமிதி திருவிழாவையொட்டி, புதுச்சேரி - கடலுார் சாலையில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.போக்குவரத்து எஸ்.பி., மோகன்குமார் கூறியதாவது:புதுச்சேரி கன்னியக்கோவிலில் உள்ள பச்சைவாழியம்மன் கோவிலில் நாளை மாலை தீமிதி திருவிழா நடக்கிறது. அதையொட்டி, புதுச்சேரி - கடலுார் சாலையில் மாலை 4:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.புதுச்சேரியில் இருந்து கடலுார் செல்லும் இலகுரக வாகனங்கள், பிள்ளையார்குப்பம், மனப்பட்டு, மூர்த்திக்குப்பம், கொரவள்ளிமேடு, மதிக்கிருஷ்ணாபுரம், முள்ளோடை வழியாக கடலுார் செல்ல வேண்டும்.கனரக வாகனங்கள் தவளக்குப்பம், அபிஷேகப்பாக்கம் கரிக்கலாம்பாக்கம், சேலியமேடு, பாகூர், குருவிநத்தம், முள்ளோடை வழியாக கடலுார் செல்ல வேண்டும்.இதேபோல், கடலுாரில் இருந்து வரும் வாகனங்கள் முள்ளோடை, பரிக்கல்பட்டு, குருவிநத்தம், பாகூர், சேலியமேடு, கரிக்கலாம்பாக்கம், அபிஷேகப்பாக்கம், தவளக்குப்பம் வழியாக புதுச்சேரி செல்ல வேண்டும் என்றார்.
14 hour(s) ago
14 hour(s) ago
14 hour(s) ago
15 hour(s) ago