உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரி வளர்ச்சிக்கு வைத்திலிங்கம் எதையும் செய்யவில்லை: ரங்கசாமி

புதுச்சேரி வளர்ச்சிக்கு வைத்திலிங்கம் எதையும் செய்யவில்லை: ரங்கசாமி

காரைக்கால்: காரைக்கால் மாவட்டத்தில் பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயத்தை ஆதரித்து முதல்வர் ரங்கசாமி பல்வேறு இடங்களில் ஓட்டு சேகரித்தார்.காரைக்கால் மாவட்டத்தில், பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயத்தை ஆதரித்து முதல்வர் ரங்கசாமி , பூவம், கோட்டுச்சேரி, திருவேட்டக்குடி, வரிச்சிக்குடி, நெடுங்காடு உள்ளிட்ட பகுதிகளில் நேற்று ஓட்டு சேகரித்தார். முன்னதாக, அமைச்சர் திருமுருகன் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் சந்திரப்பிரியங்கா, பா.ஜ., மாவட்ட பொறுப்பாளர் மீனாட்சிசுந்தரம், மாநில துணைத் தலைவர் ராஜசேகரன் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.பிரசாரத்தில் முதல்வர் ரங்கசாமி பேசியதாவது:நமச்சிவாயம் அனைவரும் அறிந்த முகமாக உள்ளார். மக்களின் மனநிலை அறிந்தவர். எனவே நமது வேட்பாளரை பெருவாரியான ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்.மத்திய அரசு புதுச்சேரிக்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளது. மத்தியில் பா,ஜ., மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கூடுதல் நிதி கேட்டு பல திட்டங்கள் நிறைவேற்றலாம். கடந்த 5 ஆண்டுகளில் வைத்திலிங்கம் புதுச்சேரி வளர்ச்சிக்கு எதையும் செய்யவில்லை.புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை, இலவச சைக்கிள், மடிக்கணினி, ரூ.220 கோடி மதிப்பில் புதிய சாலைப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது.மத்தியில் மீண்டும் மோடி பிரதமரானால் ,மோடி தலைமையிலான அமைச்சரவையில் நமச்சிவாயத்திற்கு இடம் கிடைக்கும். அவர் அமைச்சராவதன் மூலம் புதுச்சேரிக்கு முழுமையான நிதியை பெறலாம்.இதன் மூலம் மாநிலம் வளர்ச்சியடைய மேலும் பல திட்டங்களை கொண்டு வர தாமரை சின்னத்தில் ஓட்டளிக்க வேண்டும்.இவ்வாறு, முதல்வர் பேசினார்.பிரசாரத்தில் என்.ஆர். காங்., மற்றும் கூட்டணி கட்சிகளின் தொண்டர்கள் திரளாக பங்கேற்றனர். பல இடங்களில் பொதுமக்களும் திரண்டு இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ