மேலும் செய்திகள்
மகளிர் தினத்தை முன்னிட்டு ஓவியக் கண்காட்சி
9 hour(s) ago
குண்டர் சட்டத்தில் ரவுடி கைது
9 hour(s) ago
பிரசார வாகனங்களை தேர்தல் அதிகாரிகள் ஆய்வு
9 hour(s) ago
போதைப் பொருள் தடுப்பு முகாம்
9 hour(s) ago
புதுச்சேரி: வில்லியனுாரில் 100 சதவீத ஓட்டுப்பதிவினை வலியுறுத்தி நடந்த வில்லுப்பாட்டு நிகழ்ச்சியினை மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் துவக்கி வைத்து பார்வையிட்டார்.இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, முறையான வாக்காளர் கல்வி மற்றும் தேர்தலில் பங்கெடுத்தல் திட்டத்தின் கீழ், புதுச்சேரி மாவட்ட தேர்தல் அதிகாரி அலுவலகம் சார்பில் 100 சதவீத ஓட்டுப்பதிவினை வலியுறுத்தி வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்திருந்தது. அதன்படி நேற்று முன்தினம் அரியூர், கூனிச்சம்பட்டு, கூடப்பாக்கம் ஆகிய பகுதிகளில் வாக்காளர் விழிப்புணர்வு குறித்து வில்லுப்பாட்டு நிகழ்ச்சி நடந்தது.நேற்று வில்லியனுார், மூலகுளம், மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி நடந்தது. வில்லியனுாரில் நடந்த நிகழ்ச்சியனை மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் துவக்கி வைத்து பார்வையிட்டார். இன்று குருசுகுப்பம், பூராணங்குப்பம், அபி ேஷகப்பாக்கம், அரங்கனுார் பகுதியில் நடக்கிறது.ஏற்பாடுகளை மாவட்ட தேர்தல் அதிகாரி அலுவலகத்தின் வாக்காளர் விழிப்புணர்வு பிரிவு செய்திருந்தனர்.
9 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago